=

மீனலோசனி – Tamil Kamakathaikal

“ஏன் இப்படிலாம் பண்ணுறேன்னுசொல்லு…”

“நீ முதல்ல அழறதை நிப்பாட்டு.. நான் சொல்லுறேன்.. கண்ணை தொடைச்சுக்கோ..ப்ளீஸ்..”நான் சொன்னதும் மீனு கண்களை துடைத்துக் கொண்டாள். கர்ச்சீப்பை எடுத்து மூக்கை உறிஞ்சிக் கொண்டாள். நிமிர்ந்து என்னை பார்த்தாள்.“ம்ம்… சொல்லு…”நான் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தேன். பின்பு மெல்ல பேச ஆரம்பித்தேன்.“நீ… நீ… என்னை லவ் பண்றது எனக்கு தெரியும் மீனு… கண்டுபுடிச்சுட்டேன்..”“ஆமாம்.. பெரிய உலக அதிசயத்தை கண்டு பிடிச்சுட்டாரு..? அதான் எல்லாருக்கும் தெரியுமே..? நான் உன்கிட்ட வாய் விட்டு சொன்னது இல்ல.. அவ்வளவுதான..? அதுக்கென்ன இப்போ..?”“இது… இந்த லவ்… இது.. வேணாம் மீனு…?”சொல்லிவிட்டு நான் மீனுவின் முகத்தை பார்த்தேன். அவள் முகத்தில் எந்த சலனமும் இல்லை. மிக அமைதியாக இருந்தது.“ஏன்…? என்னைய புடிக்கலையா..? என்னை விட நல்ல பொண்ணா எதிர்பாக்குறியோ..?”“ச்சே.. ச்சே.. அதெல்லாம் இல்லை மீனு… உனக்கென்ன குறைச்சல்…?”“அப்புறம் என்ன…?”“நான்தான் உனக்கு பொருத்தமா இருக்க மாட்டேன் மீனு.. நீ வேற யாராவது உனக்கு பொருத்தமா ஒருத்தனை ..”“நீ எனக்கு பொருத்தமா இல்லைன்னு யார் சொன்னா..?”“ஏன்..? நான்தான் சொல்லுறேன்..”“ஏன் அப்படி சொல்லுற..?”

“என்ன மீனு நீ..? நீ எவ்வளவு அழகா இருக்குற..? எவ்வளவு படிச்சிருக்க..? கை நிறைய சம்பாதிக்கிற..? நல்ல வசதியான வீட்டுப் பொண்ணு.. உனக்கேத்த மாதிரி யாரையாவது…. நீ என்னடான்னா என்னைப் போய் லவ் பண்ணிக்கிட்டு…” நான் படபடவென சொன்னேன். மீனு கொஞ்ச நேரம் என் முகத்தையே அமைதியாக பார்த்தாள். பின்பு தன் வலது கையை எடுத்து என் கன்னத்தில் வைத்தாள். என் முகத்தை அவள் பக்கமாக திருப்பி காதலுடன் பார்த்தாள்.“உனக்கு என்னடா குறைச்சல்..? இந்த உலகத்திலேயே நீதான் என் கண்ணுக்கு அழகா தெரியுற.. படிப்பு என்ன பெரிய படிப்பு..? கவுரமான வேலைல இருக்குற.. கைநெறைய சம்பாதிக்காட்டாலும் ஒரு குடும்பத்தை நடத்துற அளவு சம்பாதிக்கிற.. எந்த கெட்ட பழக்கமும் கிடையாது.. எந்த பொண்ணையும் ஏறெடுத்து பாக்க மாட்ட.. ஒரு ஆம்பளைக்கு இதை விட என்ன வேணும்..?”

மீனு இந்த உலகத்திலேயே நான்தான் சிறந்த ஆண் என்பது மாதிரி பேச, நான் சற்று திணறிப் போனேன். அவளது கையை என் கன்னத்தில் இருந்து எடுத்து, என் முகத்தை விலக்கிக் கொண்டேன். தலையை குனிந்தபடி சொன்னேன்.“அதெல்லாம் சரியா வராது மீனு.. வேணாம் ப்ளீஸ்…”

“லவ் பண்ணாம… வாழ்ந்து பாக்காம… அது சரியா வராதுன்னு, நீயா எப்படி சொல்லுற..?”“சொன்னா கேளு மீனு…”“இப்போ என்ன பிரச்னை உனக்கு..?” என மீனு திடீரென கேட்டாள்.“பிரச்னையா…? எனக்கு என்ன பிரச்னை..? எனக்கு ஒன்னும் பிரச்னை இல்லை..”“உனக்குத்தான் பிரச்னை.. உன் பிரச்னை என்னனு சொல்லு.. நான் உன்னைவிட அதிகமா சமபாதிக்கிறதுதான் பிரச்னையா..? நாளைக்கே நான் வேலையை ரிசைன் பண்ணிறவா…?”மீனு அப்படி கேட்டதும் நான் திகைத்துப் போனேன்.“ச்சே.. ச்சே… அதெல்லாம் வேணாம் மீனு…”“பின்ன..? நான் பணக்கார வீட்டுப் பொண்ணா இருக்குறதுதான் உன் பிரச்னையா..? எல்லாத்தயும் விட்டுட்டு நாளைக்கே உன்கூட வந்துடவா..?”“ஐயையோ… என்ன மீனு பேசுற நீ…? எனக்காக எதுக்கு நீ எல்லாத்தையும் விட்டுட்டு…”“சொல்லுடா… நான் என்ன பண்ணனும்..? என்ன பண்ணுனா நீ என்னை லவ் பண்ணுவ..?”

See also  புருஷனுக்கு தெரியாமல் கள்ளத்தொடர்பு - Tamil Kamakathaikal

மீனுவின் குரல் இப்போது தழுதழுக்க ஆரம்பித்தது. அவள் கண்களில் கண்ணீர் துளி ஒன்று திரண்டு, வழிந்து ஓட ரெடியாக இருந்தது. என் மனதுக்குள் அவள் மீதான காதல் பொங்கி பெருக ஆரம்பித்தது. என்ன பெண் இவள்..? என்னிடம் என்ன இருக்கிறது என்று என்னை இப்படி காதலிக்கிறாள்..? எனக்காக எல்லாவற்றையும் விட்டு விட தயாராயிருக்கிறாளே..? எனக்காக இப்படி ஏங்கும் இவளுக்கு நான் என்ன செய்திருக்கிறேன்..? இவளை கண்ணீர் சிந்த வைத்ததை விட..? நினைக்க, நினைக்க எனக்கும் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.

“வே….வேணாம் மீனு..” நான் பலவீனமாக தலையாட்டி மறுத்தேன்.அவள் அவ்வளவு சொல்லியும் நான் அவளது காதலை மறுக்க, மீனு துடித்துப் போனாள். முட்டிக்கொடிருந்த கண்ணீர் இப்பொது அவளது முகம் நனைத்து ஓட ஆரம்பித்தது.“இன்னும் உனக்கு புரியலைல..? நான் உன்னை எந்த அளவு லவ் பண்ணுறேன்னு உனக்கு புரியலைல..? எப்போடா புரிஞ்சுக்கப் போற..? சொல்லு… எப்போ புரிஞ்சுக்கப் போற..? ஒரு வேளை நான் என் உயிரை விட்டா…?”

அவள் சொல்லி முடிக்கும் முன்னே, நான் அவள் கன்னத்தில் “பளார்” என்று அறைந்தேன். மீனு அதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அடி விழுந்த கன்னத்தை பிடித்தவாறு என்னை நிமிர்ந்து பார்த்தாள். நான் பட்டென்று அவளை இழுத்து என் மார்போடு அணைத்துக் கொண்டேன். மீனுவும் இரண்டு கைகளாலும் என் இடுப்பை இறுக்கிக்கொண்டு, சுகமாக என் மார்பில் புதைந்து கொண்டாள். இப்போது என் கண்களிலும் கண்ணீர் வழிந்தோட ஆரம்பித்தது. “என்ன வார்த்தை சொல்ற மீனு.. நீ போய்ட்டா.. அப்புறம் நான் மட்டும் எப்படி இருப்பேன்..? எனக்கும் உன்னை புடிக்கும் மீனு.. என் உயிரை விட ரொம்பபுடிக்கும்.. என்னைக்கட்டிக்கிட்டு நீ கஷ்டப்படக்கூடாதுன்னுதான் நான் இப்படிலாம் நடந்துக்குட்டேன்..”

சொல்லிவிட்டு நான் அவளை மேலும்இறுக்கிக்கொண்டேன். மீனு சத்தம் போடாமல் என் மார்புக்குள் அடங்கியிருந்தாள். இருவரும் சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தோம். எனது கண்ணில் இருந்து வடிந்த நீர் மீனுவின் நெற்றியை சுட்டிருக்க வேண்டும். மீனு பட்டென்று எழுந்து கொண்டாள். என் கண்ணீரை ஒற்றை விரலால் துடைதெடுத்தாள். என் முகத்தை இரு கையாளும் தாங்கிக் கொண்டாள். காதல் பொங்க என்னை பார்த்தாள்.“உன்னை கட்டிக்கிட்டா நான் கஷ்டப்படுவேனா..? நீ இல்லாட்டாதாண்டா என் உயிரே போய்ட்ட மாதிரி கஷ்டப்படுவேன்..”சொன்ன மீனு பட்டென்று தன் சிவந்த உதடுகளை என் உதடுகளோடு வைத்து பொருத்திக் கொண்டாள். என் மேலுதடு அவளது இதழ்களுக்குள் மென்மையாக அகப்பட்டுக் கொண்டது. நான் அதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் மீனுவின் மேலிருந்து வந்த இனிய நறுமணமும், மெத் மெத்தென்ற அவளது உதடுகளின் மென்மையும், தேன் போல் இனித்த அவளது உதட்டு ஈரமும் என்னை அசையவிடாமல் செய்தன. நான் விலகத் தோன்றாமல் அப்படியே அமர்ந்திருந்தேன்.

See also  பக்கத்துக்கு வீட்டு புது பொண்டாட்டி - Tamil Kamakathaikal

Hits: 4031

Leave a Comment

Your email address will not be published.

error: Content is protected !!